வெந்தயத்தை எப்படி பயன்படுத்தினால் நல்லது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Health benefits of venthayam

பொதுவாக வீட்டு சமையலறையில் முக்கிய மசாலாவாக பயன்படுவது வெந்தயம். இந்த வெந்தயத்தை சிலர் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் பயன்படுத்துவதாக நினைக்கின்றனர். ஆனால் வெந்தயத்தில் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரக்கூடிய பண்புகள் அடங்கியுள்ளது.

health tips

அதன்படி, இறைச்சிகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் வெந்தயத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து, பாஸ்போலிப்பிட்கள், கிளைகோலிப்பிட்கள், ஒலிக் அமிலம், லினோனெனிக் அமிலம், கோலின், வைட்டமின்கள், நிகோடினிக் அமிலம், நியாசின் என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

குறிப்பாக உடல் சூட்டை தணிக்க வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடைகிறது. அதேபோல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இதனை சாப்பிடலாம்.

health tips

இவ்வாறு வெந்தயத்தை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்றும். அதேபோல் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்கும்.