96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"இந்த பொருள் இருந்தால் போதும்! ஒரே நாளில் வெள்ளைமுடியை கருப்பாக்கலாம்!"
தற்போதைய காலக்கட்டத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் தலை முடி நரைக்கும் பிரச்சனை உள்ளது. ரசாயனம் கலந்த ஷாம்பூ உபயோகித்தல், தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல், ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவை நரைக்குக் காரணங்களாக உள்ளன.
இதை தவிர்க்க இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலை முடியை கருமையாக்கலாம். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1-1/2கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவேண்டும். பின்னர் அதில் 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவேண்டும்.
தண்ணீர் நிறம் மாறியதும் இறக்கிவிடவேண்டும். அடுத்து மிக்ஸியில் 2கைப்பிடி மருதாணி, 3 லவங்கம், 10மிளகு சேர்த்து கொதிக்க வைத்த டீத்தூள் தண்ணீரை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு பவுலில் அரைத்த கலவையுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவேண்டும்.
அதை 10நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். இந்த பேஸ்டை தலைமுடியின் வேர் பகுதியில் படும்படி நன்கு மசாஜ் செய்யவேண்டும். இதை 1 மணிநேரம் தலையில் ஊறவிட்டு பிறகு அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி செய்தால், நரையில் இருந்து தலைமுடியை பாதுகாக்கலாம்.