96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் மாரடைப்புகள்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
கிறிஸ்துமஸ் கொண்டாட இரவின் போது அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவதாக சுவீடனில் உள்ள பிரபல லன்ட்(Lund) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார். பொதுவாக, குளிர் காலங்களில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் அதிகரித்து மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என நாம் கேள்விப்பட்டிருப்போம்.
குளிர் கால விடுமுறைகளில் தான் ஹார்ட் அட்டாக்குகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், குறிப்பாக கிறிஸ்துமஸ் அன்று மாலை, விடுமுறை காலங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும், மற்ற விடுமுறை நாட்களை விட, கிறிஸ்துமஸ் அன்று இரவு 10.00 மணியளவில் 37 சதவிகிதம் அதிகமாக ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதாக அந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.