சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
அச்சச்சோ.. இதுதெரியாம போச்சே..! சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க இப்படி செய்தால் போதும்..!
இயல்பாகவே குளிர்காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து, வறண்ட காற்றானது வீசும். இதனால் நமது சருமம் உலர்ந்து வறட்சி ஏற்படும். வழக்கமான நேரத்தில் நாம் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு முறைகள் குளிர்காலத்தில் பெரும்பாலும் உதவாது. பனிக்காலத்திற்கு ஏற்றாற்போல சரும பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் குளிக்கும் போது மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும். அதிக சூடுள்ள நீரில் குளித்தால், இயற்கையாகவே சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசை நீங்கி சரும வறட்சி ஏற்படலாம்.
குளிக்கும் போது நீண்ட நேரம் குளிக்காமல், 10 நிமி முதல் 15 நிமி வரை குளிக்கலாம். அப்போது, அடர்த்தியான சோப்பை பயன்படுத்தாமல், மென்மையான சோப்பை பயன்படுத்துவது நல்லது.
தினமும் குளித்ததும் சருமத்தை அழுத்தி துடைக்காமல், பருத்தியினால் தயார் செய்யப்பட்ட துணியை கொண்டு மென்மையாக உடலில் உள்ள நீரை சுத்தம் செய்யலாம். குளித்ததும் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசலாம்.
மாஸ்சுரைசர் லோஷன் போன்று இல்லாமல் கிரீம், ஆயில்மெண்ட் போன்றவையாக வாங்குவது நல்லது. அதனைப்போல, உதட்டுக்கு லிப்ஸ்டிக் உபயோகம் செய்வதை தவிர்த்து, லிப் பாம் பயன்படுத்தலாம். சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத உடையை தேர்வு செய்து அணிய வேண்டும்.
துணிகளை சுத்தம் செய்யும் போது அடர்த்தியான வேதிப்பொருளை உபயோகம் செய்யாமல், குறைந்தளவு வேதிப்பொருள் உள்ள சோப் அல்லது சோப் பவுடரை உபயோகம் செய்யலாம்.
இயற்கை முறையில், மஞ்சள் கருவுடன் அரை கரண்டி தேன் மற்றும் ஒரு கரண்டி பால் பவுடர் சேது, பசைபோல் மாற்றி முகத்தில் தடவ வேண்டும். இதனை 20 நிமிடத்திற்கு பின்னர் நீரில் கழுவிவிட்டால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
பப்பாளியை மசித்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து நீரில் அதனை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, புதிய செல்கள் உருவாக வாய்ப்பு கிடைக்கும்.
கேரட்டை பசைபோல அரைத்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து நீரால் கழுவி வர, சரும பிரச்சனைகள் சரியாகும். தினமும் தலைமுடி மற்றும் கை, கால் பகுதிகளில் எண்ணெய் தேய்ப்பது சாலச்சிறந்தது.