சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
முகமெல்லாம் எண்ணெய் பசையுடன் இருக்கா?.. இயற்கையான பேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.!
கீழ்க்காணும் பேஸ் பேக்கை வாரத்தின் சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் எண்ணெய் பசை கொண்ட தன்மையில் இருந்து விடுபட இயலும்.
ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கவல்லது. சருமத்தின் துளைகள் அடைபடாமல் காக்கப்படும். சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க தயிர் உதவி செய்கிறது. தேன் அலர்ஜி எதிர்ப்பு பண்பினை கொண்டுள்ளது. பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ, சருமத்தை மென்மையாக்குகிறது.
பேஸ் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - தேவையான அளவு
தேன் - 2 கரண்டி,
பாதாம் - 5
தயிர் - 1 கரண்டி
பேஸ் மாஸ்க் செய்முறை :
எடுத்துக்கொள்ளப்பட்ட ஓட்ஸ், பாதாம் இரண்டையும் பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேன், தயிர் கலந்து பசைபோல குழப்பி, இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.
பின்னர், 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்தின் ஒரு நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் செய்து வர, சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும்.