96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஒரே மாதத்தில் கூந்தலின் நீளத்தை அதிகரிக்க வேண்டுமா.? மூன்று பொருட்கள் போதும்..
பெரும்பாலானவர்களுக்கும் தலை முடி உதிர்தல் பிரச்சனை மற்றும் இளநரை ஆகியவை சாதாரணமாகி விட்டன. அதற்கு பெரும்பாலும் நமது மாறிவரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையே காரணமாகும். முக அழகை கூட்டிக் காட்டுவதில் தலை முடிக்கு முக்கியப் பங்கு உள்ளது.
ஆண், பெண் இருபாலருக்கும் தலை முடியில் தான் முக அழகு வெளிப்படுகிறது. தற்போது முடி உதிர்வை தடுக்கும் மூலிகை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று இங்கு பார்ப்போம். 5 பெரு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் விதைகளை நீக்கி, வெயிலில் உலர்த்திக் கொள்ளவேண்டும்.
பின்னர் இதை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவேண்டும். அடுத்து ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலையை சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு இரும்புக் கடாயை வைத்து, அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணையை ஊற்ற வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் அதில் அரைத்த கரிசலாங்கண்ணி பேஸ்ட், பெரு நெல்லிக்காய் பொடி, மற்றும் 1/2கப் மருதாணிப்பூ சேர்த்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். இந்தப் பொருட்களின் சாறு நன்கு எண்ணையில் கலந்த பின்பு, இதை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி தினமும் உபயோகிக்கலாம்.