53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சுவையான புதினா பன்னீர் புலாவ் செய்வது எப்படி?.. டிப்ஸ் உள்ளே.!
பித்தம் உட்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் புதினாவின் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இதனை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது, உடல் நலனை மேம்படுத்தும்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 4 கப்,
பன்னீர் - 300 கிராம்,
புதினா - 2 கட்டு,
கிராம்பு - 8,
பட்டை - 2,
வெங்காயம் - 4,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட பன்னீரை துண்டு-துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
புதினாவை நன்கு சுத்தம் செய்து, மிக்சியில் சேர்த்து பச்சை மிளகாயுடன் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசியை உதிரி-உதிரியாக வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஆந்திரா ஸ்டைலில் அசத்தல் புளியோதரை; செய்வது எப்படி?..!
பின் வானெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர், பன்னீர் துண்டுகள் சேர்த்து தனியாக வறுத்து எடுக்க வேண்டும்.
அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் புதினா, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
புதினாவின் பச்சை வாசனை போனதும், வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான புதினா பன்னீர் புலாவ் தயார்.
இதையும் படிங்க: இட்லி-தோசைக்கு அருமையான, சத்தான முருங்கைக் கீரை பொடி செய்வது எப்படி?..!