நாவில் எச்சில் ஊறவைக்கும் ஹெல்த்தியான கேரட் சாதம் செய்வது எப்படி?..! இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!



How to Prepare Carrot Rice Tamil

 

கேரட் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். இன்று ஹெல்த்தியான கேரட் சாதம் எப்படி செய்வது? என காணலாம்.

தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் - 1 கப்,
துருவிய தேங்காய் - 1 கப்,
பச்சை மிளகாய் - 1,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு,
வேர்க்கடலை - 5 ஸ்பூன்,
கருவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்.

செய்முறை:

★முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

★பின் வேர்க்கடலை, இஞ்சி, பூண்டு விழுது, கேரட் சேர்த்து வதக்க வேண்டும். 

★அடுத்து சாம்பார் பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கி, தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி, அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

★பின் ஒரு கப் அரிசி எடுத்து கொதிக்க வைத்த தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.

★இறுதியாக தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஹெல்த்தியான கேரட் சாதம் தயாராகிவிடும்.