குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும் மோர் சாதக்கஞ்சி சூப்...!
வடித்த கஞ்சி சாதம் மற்றும் மோர் சேர்த்து செய்யும் சூப், உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது.
தேவையான பொருட்கள் :
சாதம் வடித்த கஞ்சி - 1 குவளை,
புளித்த மோர் - கால் குவளை,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை :
எடுத்துக்கொண்ட இஞ்சி மற்றும் பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை கொட்டி வதக்க வேண்டும்.
இவை நன்கு வதங்கிய பின்னர் சாதம் வடித்த கஞ்சி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்த பின்னர், இதனோடு மோர் சேர்த்து, கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறலாம்.
சுவையான மற்றும் உடலுக்கு நன்மை தரும் சாதம் கஞ்சி சூப் தயார்.