உடல் எடை, தொப்பையை குறைத்து உடலுக்கு நன்மை தரும் சுவையான ஓட்ஸ் உப்புமா; வீட்டில் செய்வது எப்படி?.!



How to Prepare Oats Upma Tamil

 

காலை நேரங்களில் எப்போதும் இட்லி, தோசை, உப்புமா, சேமியா என சாப்பிட்டு பழகியோர் ஒரு மாறுதலுக்கு ஓட்ஸை முயற்சிக்கலாம். இன்று ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி என காணலாம்.

ஓட்ஸ் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - ஒரு கப், 
வெங்காயம் - ஒன்று, 
பச்சை மிளகாய் - 4, 
கேரட் - ஒன்று, 
பீன்ஸ் - 6, 
பச்சை பட்டாணி - சிறிதளவு, 
துருவிய தேங்காய் - சிறிதளவு, 
கடலைப்பருப்பு - இரண்டு ஸ்பூன், 
கடுகு - தேவையான அளவு, 
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கப் அளவு ஓட்ஸ் எடுத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த ஓட்ஸை தனியாக எடுத்து வைத்து ஆற விடவும். பிறகு வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, கடுகு வெடித்ததும் கடலை பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவற்றை போட்டு நன்றாக வதக்கவும். பின் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி, அதில் ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதாவது, ஒரு கப் ஓட்ஸ் என்றால் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் ஓட்ஸை கொட்டி நன்றாக கிளறவும். 

ஓட்ஸ் நன்றாக வெந்தவுடன் இறக்கும் தருவாயில் கொத்தமல்லியை நறுக்கி தூவி இறக்கவும். இப்போது சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி. இதை தினமும் ஒரு தடவை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.