"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
பாலியல் தொல்லையளித்த ஆசிரியரை விரட்டி விரட்டி செருப்படி.. பகீர் சம்பவம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிரியாளா மாவட்டத்தில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைப்பள்ளியில், அங்குள்ள சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், இதுகுறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று ஆசிரியரை விரட்டி விரட்டி செருப்பால் தாக்கினர். மேலும், சுவர் ஏறிக்குதித்து தப்பிச் செல்ல முயன்ற அவரை விரட்டிப்பிடித்து தாக்கினர்.
இதையும் படிங்க: மகளை மிரட்டி சீரழித்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை; கேரளா நீதிமன்றம் அதிரடி.!
பின் காவல் நிலையத்தில் ஆசிரியர் ஒப்படைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காய்கறி வியாபாரிகள் மீது தறிகெட்டு பாய்ந்த லாரி; 10 பேர் பரிதாப பலி., 20 பேர் படுகாயம்.!