#Breaking: பிரிவினை வாத இயக்கமான நாதக? திருச்சி எஸ்பி வருண் குமார் பகிரங்க குற்றச்சாட்டு.! 



Trichy SP Varun Kumar on NTK Party 

சண்டிகரில் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரும் கலந்துகொண்டார். 

பிரிவினைவாத இயக்கம்

அந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் பேஸ்க்கையில்., நாம் தமிழர் கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். 

இதையும் படிங்க: ரஜினியை சந்தித்தது ஏன்? - சீமான் பேட்டி.. விபரம் உள்ளே.!

நாங்கள் பாதிக்கப்பட்டோம்

அக்கட்சி கண்காணிக்கப்படவேண்டிய இயக்கம் ஆகும். நானும், எனது குடும்பமும் அக்கட்சியின் இணையவழி தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். நான், எனது மனைவி, குழந்தைகள் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. 

இவர்களை கட்டாயம் நாம் கண்காணிக்க வேண்டும். எங்களின் கண்காணிப்பில் நாம் தமிழர் கட்சி, அதன் நிர்வாகிகள் இருந்து வருகின்றனர்" என தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking : நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியில் இருந்து விலகல்.!