96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
New Year Specials: சுவையான பால்கோவாவை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?..!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி இனிப்புகள் வாங்க மறந்துவோட்டோம் என்று நினைப்பவர்கள், இனிப்புகளை எதாவது சாப்பிடலாம் என்று நினைப்பார்கள் வீட்டிலேயே எளிய முறையில் பால்கோவாவை செய்து அசத்தலாம். இனிக்க இனிக்க சாப்பிடலாம்.
பால்கோவா செய்ய தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்,
சீனி - 1/4 கிலோ,
பாதாம் பருப்பு - 4,
கிஸ்மிஸ் பழம் அல்லது உளர் திராட்சை - 4,
ஏலக்காய் தூள் - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட பாலை அகன்ற வானெலியில் ஊற்றி, அது கால் லிட்டராக மாறும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இவை தயாரிப்பின் போது பால் பலமுறை பொங்கி வரும். அதனால் அடுப்புக்கு அருகில் இருந்தவாறு, அவ்வப்போது ஓரத்தில் வரும் பாலாடையை கிளறிவிட்டவாறு தயார் செய்ய வேண்டும்.
1 லிட்டர் அளவில் ஊற்றிய பால் கால் லிட்டர் அளவில் வந்ததும், அதில் கால் கிலோ அளவிலான சீனியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சுவை அதிகம் தேவைப்படுபவர்கள் ஒன்றரை லிட்டர் பால் வாங்கி, அதில் 350 கிராம் அளவிலான சீனியை சேர்த்துக்கொள்ளலாம்.
பால் - சீனி கலவை சேர்க்கப்பட்டதும் சிறிது நேரம் அடிப்பத்ததாக வகையில் கிளறிவிட்டு, தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். சீனி மற்றும் ஏலக்காய் தூள் கிளறிய 5 நிமிடம் முதல் 10 நிமிடத்திற்குள் கலவையை இறக்கவிட வேண்டும்.
சுவையான பால்கோவா தயார்.. இந்த பால்கோவா சூடு குறைந்ததும் அதில் பாதாம் பருப்பு மற்றும் உளர் திராட்சையை தூவி பரிமாறலாம், சாப்பிடலாம்.