உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பன்னீர் கட்லெட்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!



How to prepare panneer cutlet

பன்னீரில் அதிகளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. நீரிழிவு உள்ளவர்கள்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

மஞ்சள் - 1 தேக்கரண்டி 

உப்பு - தேவைக்கேற்ப 

வெங்காயம் - 4 

பச்சை மிளகாய் - 7 

கருவேப்பிலை - 2 கொத்து 

பன்னீர் - 500 கிராம் 

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி 

கரம் மசாலா - ½ தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 3

பொரிக்க தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கேற்ப 

பிரட் தூள் - தேவைக்கு ஏற்ப 

உப்பு - தேவையான அளவு 

சோளமாவு - 4 தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் வெங்காயம், கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் பன்னீரையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

★உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ள வேண்டும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

★வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் பூண்டு கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதில் சோம்பு, கரம் மசாலா, மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளவும்.

★பின் துருவிய பன்னீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து தீயை அணைத்து ஆற வைக்க வேண்டும்.

★பன்னீர் கலவையை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

★அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டையாக உருட்டி தட்டையாக செய்து கொள்ள வேண்டும்.

★பின் சோளமாவுடன் நீர் சேர்த்து கலவையாக தயாரித்தவுடன், கட்லெட்டுகளை சோளமாவு கலவையில் முக்கி, பிரட்டில் நன்றாக பெரட்டி எடுத்து வைக்க வேண்டும்.

★இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்து கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் பன்னீர் கட்லெட் தயாராகிவிடும்.