96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
குட்டீஸ் ஃபேவரிட் வாழைப்பழ குக்கீஸ் ஹோம் மேட் ரெசிபி.!
குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வாழைப்பழத்தை வச்சு ஈவினிங் ஸ்நாக்ஸா ஹோம் மேட் குக்கீஸ் எப்டி பண்ணலாம்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள் :
3 வாழைப்பழம், 1/2 கப் ஓட்ஸ், 1/2 டீஸ்பூன் உப்பு, 1/4 கப் உலர்ந்த திராட்சை, 2 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ், 1/2 கப் மைதா மாவு, 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் 1/2 டீஸ்பூன் மைதா பேக்கிங் சோடா, 4 டேபிள் ஸ்பூன் பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில் பொடித்த சர்க்கரை & வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஓட்ஸ் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுளில் வாழைப்பழம், ஓட்ஸ், மைதா மாவு, உப்பு, உலர்ந்த திராட்சை, பேக்கிங் பவுடர், பால், பேக்கிங் சோடா, சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கலந்து கொள்ளவும். பின் பைபிங் பேக்கில் பீட் செய்த மாவை அடைத்து விரும்பிய வடிவில் செய்து அதில் சாக்கோ சிப்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
பின் குக்கீஸ் வேக வைக்கும் தட்டில் பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி குக்கீஸை வைக்கவும். அதன்பிறகு 10 நிமிடங்கள் ஓவனை சூடாக்கிக் கொள்ளவும். பிறகு ஓவனில் குக்கியை வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் குக்கீஸ் வெந்ததும் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து ஆற விடவும். சுவையான, மிருதுவான வாழைப்பழ குக்கீஸ் தயார். மாலை வேளையில் தேநீருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.