"அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?! அப்போ இதை செய்யுங்க!"



long-growth-for-hair

அனைவருக்கும் நீளமான, மிகவும் அடர்த்தியான தலைமுடியைப் பெற வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். ஆனால் மாறிவரும் உணவுமுறைப் பழக்கத்தால் அனைவரும் சந்திக்கும் பிரச்சனை தலை முடி உதிர்வு. இதில் சிறியவர்கள், பெரியவர்கள் யாரும் விதிவிலக்கல்ல.

hair

தலைமுடி உதிர்வுக்கு பொடுகு, ரத்தசோகை, அரிப்பு, முறையற்ற தூக்கம் ஆகியவையும் காரணமாகின்றன. இதற்கான தீர்வை இங்கு காண்போம். ஒரு கிண்ணத்தில் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி மசித்து, அதில் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து, தலையில் தடவி, 1/2 மணிநேரம் கழித்து ஷாம்பூவால் அலசலாம்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் அப்ளை செய்து 1/2 மணிநேரம் கழித்து ஷாம்பூவால் தலைமுடியை அலசவேண்டும். மேலும் ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து, அதை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

hair

பின்னர் 4 மணிநேரம் கழித்து ஊறிய வெந்தயத்தை மைய அரைத்துக் கொள்ளவேண்டும். இதை தலைமுடியின் வேர்க்கால் பகுதியில் படுமாறு தடவி, 1/2 மணிநேரம் களைத்து ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும். இதையெல்லாம் வாரம் இருமுறை செய்து வந்தாலே தலைமுடி அடர்த்தியாக வளரும்.