96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
செத்தே போனாலும் விட்டு போகாத ராசிகள்.. இவர்களை காதலித்தால் பிரேக்கப் ஆகாதாம்.!
குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எந்த மாதிரியான குணம் படைத்த ராசிக்கார துணையாக இருந்தாலும் அவர்களை அனுசரித்து வாழ்க்கையை நடத்தும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த ராசிக்காரர்கள் உறவை முறித்துக் கொள்ள எப்பொழுதும் நினைக்க மாட்டார்களாம். எப்பாடு பட்டாவது அந்த உறவை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் என பார்க்கலாம்.
விருச்சிக ராசி
இயல்பாகவே பாசத்துக்கும், பண்புக்கும் கட்டுப்பட்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். ஒருவர் மீது அன்பு வைத்து விட்டால் யாருக்காகவும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். உறவை இவர்களின் இந்த குணம் தான் காப்பாற்றுகிறது. திருமணம் செய்யும் துணையுடன் இறுதி வரை வாழ வேண்டும் என்று அவர்கள் தீர்மானமாக இருப்பார்களாம். நடுவில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை தாண்டி உறவை காப்பாற்ற நினைப்பார்களாம்.
இதையும் படிங்க: மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த குழந்தை; பதறவைக்கும் காட்சி.. பெற்றோர்களே உஷார்.!
கடக ராசி
உறவில் இருப்பவர்களுக்கு துணையின் மீது அதிக ஆர்வம் மற்றும் அக்கறை இருக்கும். தங்கள் துணையின் மீது அதிர்ப்தி இருந்தாலும் தங்களது கவலைகள், ஏமாற்றங்கள் உள்ளிட்டவற்றை அவர்களிடம் அவ்வளவாக வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால், தங்கள் துணைக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்களாம்.
ரிஷப ராசி
நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் ரிஷப ராசியினர் பெயர் பெற்றவர்கள். காதல் விஷயத்தில் இவர்களை தவிர யாராலும் உண்மையாக நடந்து கொள்ள முடியாது. இயல்பாகவே இவர்களுக்கு காதல் வாழ்க்கை மீது மரியாதையும், மதிப்பும் அதிகம். ஒரு உறவில் இவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். மற்றவர்களிடம் இந்த குணங்களை பார்க்க முடியாது. தங்கள் துணை மீது இவர்கள் கொண்டுள்ள பிணைப்பு எந்த அளவுக்கு துன்பங்கள் வந்தாலும் விட்டுப் போகாது. இந்த குணம் தான் அவர்கள் தங்கள் உறவை நிலைக்க வைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்; காலை தூக்கி வேலையை காண்பித்த நாய்.. கலக்கல் கலாய் காணொளி.!