பணம் நம்மிடையே தங்க வேண்டுமா?.. இந்த மாதிரியான முயற்சியை கையில் எடுத்து பாருங்கள்..! 



money-savings-method

 

எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் இன்றளவில் பணமே முதன்மை முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு இடத்தில் காரியம் நடக்க வேண்டும் என்றாலும், காரியம் நடக்கக்கூடாது என்றாலும் அங்கு இருப்பவருக்கு தேவைப்படும் விஷயத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே அனைத்தும் நடக்கும். 

இன்று பணத்தை சேமிக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காணலாம். நாம் எங்கு?, எப்படி?, எதற்காக? பணத்தை செலவிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். பட்ஜெட்டை தயார் செய்து அதன்படி செலவு செய்து பழக வேண்டும். தேவையற்ற பொருட்களுக்காக செலவு செய்யக்கூடாது. 

Money Savings

அத்தியாவசிய பொருள்களுக்கு செலவு செய்ய தயங்கவும் கூடாது. சேமிக்கும் பணத்தை தனியாக வரவுவைத்து பழக வேண்டும். சேமிப்புக்கான இலக்கை நிர்ணயம் செய்து அதனை எழுதி வைக்க வேண்டும். இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் சேமிப்பு கட்டாயம் அதிகரிக்கும்.