96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உடலுக்கு இரும்பு சத்தை அதிகரிக்க உதவும் முருங்கை கீரை சாதம் செய்வது எப்படி.!
உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடிய முருங்கை கீரையை வைத்து சுவையான முருங்கை கீரை சாதம் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
முருங்கை கீரை - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
முதலில் குக்கரில் அரிசி மற்றும் பருப்பு கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் மூன்றே முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
பின் வறுத்து பொடியாக்க எடுத்து கொண்ட பொருட்களை கடாயில் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேர்த்து கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். சுவையான முருங்கை கீரை சாதம் தயார்.