விந்தணுக்கள் அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகள் கட்டாயம்!



How to solve sperm count

விந்தணு குறைபாடு 

மனிதர்களின் வாழ்வில் இனப்பெருக்கம் ஒரு முக்கிய பங்காக திகழ்கிறது. ஆனால், தற்போதுள்ள உணவு பழக்க வழக்கங்களால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த விந்தணு குறைபாட்டை சரி செய்ய என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Sperm count

விந்தணு குறைபாட்டை போக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் 

பொதுவாக ஆண்கள் தங்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

இதையும் படிங்க: காபி, டீ குடிப்பதால் தலைவலி போகுமா.! மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

காய்கறிகள்

 

பச்சை காய்கறிகள் எதுவாக இருந்தாலும் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கீரைகளை தங்களது உணவில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கு மட்டும் இல்லாமல், பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் பயனளிக்கிறது.

Sperm count

பழங்கள்

 

கொய்யா பழம், ஆரஞ்சு பழம், செவ்வாழைப்பழம், அவகேடோ போன்ற பழங்களில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

விதைகள் மற்றும் தானியங்கள் 

குறிப்பாக விதைகள் மற்றும் சிறு தானியங்களை உணவின் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது விந்தணுக்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் பாதாம், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலை போன்ற உணவுப்பொருட்களை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: ஈவினிங் ஸ்நாக்ஸ் : குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு கேபேஜ் பக்கோடா.. ட்ரை பண்ணி பாருங்க.!?