குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
மலச்சிக்கலை நீக்க உதவும் அருமையான சூப்... இதை ஒரு முறை குடித்து பாருங்கள்...
உடலுக்கு புத்துணர்ச்சியையும், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும், மனித உடலில் உள்ள கழுவுகளை வெளியேற்றவும் பசலைக்கீரை சிறந்த ஒரு உணவு பொருளாக கருதப்படுகிறது. மேலும் பசலைக்கீரை வாய்ப்புண்ணுக்கு சிறந்த ஒரு மருந்து பொருள் ஆகும்.
தற்போது உடலை தூய்மையாக்க உதவும் பசலைக்கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - ஒரு கட்டு
உளுந்து (வறுத்தது) - ஒரு ஸ்பூன்
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
மிளகு - அரை ஸ்பூன்
சீரசும் - அரை ஸ்பூன்
உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு.
முதலில் பசலைக்கீரை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு மிக்சி ஜாரில் பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், மஞ்சள், வறுத்த உளுந்து ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
அதன்பின் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் அரைத்த கலவையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
கடைசியாக பசலைக்கீரையையும் சேர்த்து வதக்கி அதனுடன் ஆறு டம்பளர் நீர் சேர்த்து அது பாதியாக சுண்டச் செய்து உப்பு சேர்த்து இறக்கி பரிமாறவும்.சுவையான பசலைக்கீரை சூப் தயார்.