நீங்கள் குக்கர் சாதம் சாப்புடுறீங்களா..? இந்த பதிவு உங்களுக்கு தான்.! மக்களே உஷார்.!



problems for eat cooker rice

தற்போதைய பரபரப்பான வாழ்க்கையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் எளியமுறையில் எப்படி சமையலை செய்து முடிப்பது என்று தான் இல்லத்தரசிகள் யோசின்றனர். இதற்க்கு நவீன சமையல் உபகரணங்கள் அவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. சாதம் வடிப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் பலரும் தற்போது குக்கரை பயன்படுத்துகின்றனர். 

குக்கரில் சாப்பாடு செய்வது சாதாரணமான ஒன்று தான். அதனால் உடல்பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவுச்சத்து குறைந்து விடும். குக்கரில் சமைக்கும்போது அந்த சத்துகள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும். மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதனால் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

குக்கர் சாதம் சாப்பிடுவதால் சிலருக்கு புதிதாக சர்க்கரை நோய் உண்டாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குக்கர் சாதம் சாப்பிடாமல் கஞ்சி வடித்த சாதத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் நம்மை நெருங்காது. எனவே முடிந்த வரை குக்கரில் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் குக்கரில் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.