96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"முடி உதிர்வுப் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு என்னன்னு தெரியணுமா?!"
தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் உள்ள தலையாய பிரச்சனை தலைமுடி உதிர்தல் தான். இந்த முடி உதிர்வுப் பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு சிகிச்சைகள், எண்ணெய்கள், ஷாம்ப்பூக்கள் என்று பயன்படுத்தி வருகிறோம். இதை தடுக்க சில இயற்கை மருத்துவ முறைகள் உள்ளன.
அவற்றை இங்கு காண்போம். முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் வெங்காயம் ஒரு சிறந்த தீர்வாகும். வெங்காயத்தின் சாறு எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து, பிறகு தலைக்கு குளித்தால் முடி உதிராது. மேலும் கசகசாவை பாலில் ஊறவைத்து, பின்னர் அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் அதனுடன் பாசிப்பருப்பு மாவை கலந்து தலை முடியில் தேய்த்து வந்தால், தலைமுடி உதிராது. மேலும் கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதனால் முடி மேலும் அடர்த்தியாக வளரும்.
மேலும் செம்பருத்திப்பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் தலைமுடி கருமையாகும். முடக்கத்தான் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து 5 நிமிடம் கழித்து சீயக்காய் தேய்த்து தலைக்கு குளித்துவந்தால் முடி உதிர்தல் சுத்தமாக நின்றுவிடும்.