செல்போன் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சினைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Side effects of cellphone uses

தற்போதைய காலகட்டத்தில் பலரும் செல்போனுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் உடலுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் சில பிரச்சினைகள் தெரிந்து ஏற்பட்டாலும், நிறைய பிரச்சினைகள் தெரியாமலேயே ஏற்படுகிறது. அதிலும், மூளை கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

health tips

அதன்படி, இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் பார்த்துக்கொண்டு லேட்டாக தூங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும், இரவில் லேட்டாக தூங்கி விட்டு, காலையில் அதிக நேரம் தூங்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

health tips

அதுமட்டுமில்லாமல் இரவு நேரத்தில் செல்போனில் வெளிப்படும் வெளிச்சத்தினால் மூளையில் மெலடோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் இருக்கும் என்ற ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே செல்போனை அத்தியாவசிய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.