96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் பலாப்பழத்தை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.! ஏன் தெரியுமா.!?
பொதுவாக பழங்கள் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகவே இருந்து வருகின்றன. இதில் குறிப்பாக கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் பலாப்பழம் பலருக்கும் விருப்பமான பழமாக இருந்து வருகிறது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, குளுக்கோஸ், சுக்ரோஸ், வைட்டமின் பி6, வைட்டமின் சி, நியாஸின் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பலாபலத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி செரிமான மண்டலத்தின் வேலைகளை சீராக்குகிறது. இதன் மூலம் மலச்சிக்கல், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ளதால் நம் தோலில் ஏற்படும் நோய்களையும் வராமல் தடுக்கிறது.
குறிப்பாக இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் மெக்னீசியம், கால்சியம் அதிகமாக உள்ளது. இதனால் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
பலாப்பழத்தில் இனிப்பு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடல் எடை குறைய நினைப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் பலாப்பழம் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவர்களின் அறிவுரையை பெற்ற பின் சாப்பிடலாம்.