மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் இரவு பால் குடித்துவிட்டு தூங்குபவரா நீங்கள்.? உங்களுக்கு தான் அதிர்ச்சி செய்தி.!?
இரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு தூங்கலாமா
பொதுவாக அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பல வீடுகளிலும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பால் குடித்துவிட்டு உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும் என்று பெரியவர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது பலருக்கும் பொறுந்துவதில்லை.
யார் யார் பால் குடிக்க கூடாது
அனைவரும் கட்டாயமாக இரவில் பால் குடித்துவிட்டு தூங்கச் செல்ல வேண்டும் என்பது கிடையாது. ஒரு சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் போது மட்டும் வெதுவெதுப்பான பாலை குடித்துவிட்டு தூங்கினால் மனதை அமைதிப்படுத்துவதோடு, தூக்கத்தை வர வைக்கும் என்பதால் இரவு பால் குடித்துவிட்டு தூங்கலாம். மேலும் லாக்டோஸ் அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் பால் குடிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து பாருங்க.!?
செரிமான
பிரச்சனைஇரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு தூங்க செல்லும் போது செரிமான பிரச்சினை இருப்பவர்களுக்கு பால் எளிதில் ஜீரணம் ஆகாமல் வயிற்றில் உள்ள அமிலம் மேல் எழும்பும். அத்தகைய நேரத்தில் நம் தூக்கம் கெடுவதோடு, புளிப்பு ஏப்பம் தொண்டை எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரத்தில் சர்க்கரை கலந்த பால் குடித்துவிட்டு தூங்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் நீரிழிவு பிரச்சினை உருவாக காரணமாக இருக்கிறது. மேலும் உடல் எடை அதிகரிப்பு, சளி தொல்லை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் இரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு தூங்குவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சிறுநீரகத்தை பாதுகாக்க மது அருந்துவதற்கு முன் இந்த உணவை கட்டாயமாக சாப்பிடுங்க.!?