மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுநீரகத்தை பாதுகாக்க மது அருந்துவதற்கு முன் இந்த உணவை கட்டாயமாக சாப்பிடுங்க.!?
மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
தற்போதுள்ள காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்காகவும், மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் பலரும் பல விதமான முறைகளை பின்பற்றுகின்றனர். சிலர் குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற போதைப் பழக்கங்களை கொண்டுள்ளனர். இது ஆரம்ப காலகட்டத்தில் சந்தோஷத்தை கொடுத்தாலும், காலப்போக்கில் நம் உடல் நலனை அதிகமாக கெடுக்கிறது. மேலும் ஒரு சிலர் இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையாகி இதில் இருந்து வெளி வருவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
மேலும் ஒரு சிலர் போதை பழக்கத்தினால் பல உடல் நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கிட்னி, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டு நோய்வாய் படுகின்றனர். இவ்வாறு மது அருந்தும் போது உடல் உறுப்புகள் பாதிக்காமல் இருக்க ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?
இதையும் படிங்க: எச்சரிக்கை.! சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் உணவுகள் எது தெரியுமா.!?
ஆல்கஹாலினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் உணவுகள்
1. முட்டை - அதிக புரதச்சத்து, கொழுப்பு சத்து நிறைந்துள்ளதால் முட்டையை மது அருந்துவதற்கு முன்பு உணவாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்றில் உள்ள ஆல்கஹாலை எளிதாக ஜீரணம் செய்ய உதவுகிறது.
2. வாழைப்பழம் - வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் ஆல்கஹாலை உறிஞ்சும் அளவை கட்டுப்படுத்துவதோடு, எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்கிறது.
3. சால்மன் மீன் - ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்ட சால்மன் மீனை உணவாக எடுத்துக் கொள்ளும் போது உடலுக்குள் செல்லும் ஆல்கஹாலினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது.
மேலும் தயிர், சியா விதைகள், அவகோடா தக்காளி, சக்கரை வள்ளி கிழங்கு, ஓட்ஸ், நிலக்கடலை போன்ற உணவுகள் உடலில் செல்லும் ஆல்கஹாலின் அளவை கட்டுப்படுத்தி உடலை பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: எச்சரிக்கை.! சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் உணவுகள் எது தெரியுமா.!?