திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"2026-ல் ஆட்சி நிச்சயம்.." "வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி" - பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை பேட்டி.!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பதவி வகிக்கும் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு பாரதிய ஜனதா அரசின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு விளக்கி வருகிறார்.
இந்த யாத்திரையின் போது தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் அதன் பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஒன்பது தலைமுறையாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை என்றும் எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது என்றும் இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும் என்றும் அவர் கூறினார்.