திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் விஜயின் அரசியல் வருகை: சசிகலா கூறியது என்ன தெரியுமா?..!
நடிகர் விஜய் தமிழக மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, 2026ல் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி அடைந்து ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தனது செயல்பாடுகளை நகர்த்தவுள்ளார்.
இதற்கான முதல்கட்ட அறிவிப்பு நேற்று நடிகர் விஜய் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. விஜயின் அரசியல் பிரவேசம் கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.
நேற்று விஜயின் அரசியல் பிரவேசம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்த சசிகலா, "மடியில் கனமில்லை என்பதால் நான் பொதுமக்களின் பிரச்சனை குறித்து துணிந்து பேசுகிறேன்" என கூறினார்.
சென்னை அண்ணா நினைவிடத்தில் சசிகலா - ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.