திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Lok Sabha 2024| வேட்பாளர்களை அறிவித்த சிபிஎம்.! மதுரையில் மீண்டும் களம் காணும் சு.வெங்கடேசன்.!
2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை முறியடிக்க காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே சமூகமான முறையில் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது.
கடந்த முறை மதுரை தொகுதியில் போட்டியிட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாணார். தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளுக்கான வேட்பாளரை கம்யூனிஸ்ட் கட்சி தெரிய அறிவித்துள்ளது. கடந்த முறை மதுரை தொகுதியில் வெற்றி பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் இந்த முறையும் மதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் . திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.