குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நாடாளுமன்ற தேர்தலில் தோனி களமிறங்குகிறாரா! பாஜக-வின் புதிய திட்டம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ., சார்பில் கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் காம்பிரை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து 'தி சண்டே கார்டியன்' என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில், 37 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 'டுவென்டி-20' (2007), ஒருநாள் (2011) என இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பைகளை வென்று தந்துள்ளார்.
தற்போது வீரராக அணியில் தொடர்ந்து விளையாடி வரும் இவரை நாடாளுமன்ற தேர்தலில்(2019) ஜார்க்கண்டில் இருந்து போட்டியிட வைக்க பாஜக சார்பில் முயற்சிகள் நடக்கின்றன என்று வெளியிட்டுள்ளது. தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெல்லியை சேர்ந்த முன்னாள் வீரர் கம்பீரை டெல்லியில் போட்டியிட வைக்கவும் திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது.
இந்தியா முழுவதும் அதிக செல்வாக்கு பெற்ற இவர்களை களமிறக்கினால் பாஜக மேலும் வலிமையடையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தோனி சென்னை ஐபில் அணிக்கு கேப்டனாக இருப்பதால் தமிழகத்திலும் பாஜகவிற்கு செல்வாக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.