தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Election2024: "மோடிக்காக இரட்டை வேஷம் போடும் திமுக" - EPS கடும் தாக்கு.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் கலைகட்டி இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் பாஜக உடன் பயணித்த அதிமுக இந்த வருட பொது தேர்தலில் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. தேமுதிக புதிய தமிழகம் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் பாண்டிச்சேரியில் 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு பலூன்களை பறக்க விட்டது. ஆனால் ஆளும் கட்சியான பிறகு பிரதமர் மோடிக்கு வெள்ளை குடை பிடிக்கிறது என குற்றம் சாட்டினார்.
மேலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெறும் மின்வெட்டையும் கண்டித்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டர் ஒருவர் இபிஎஸ் இருக்கும் போது யுபிஎஸ் எதற்கு என கோஷமிட்டார். இதனை கவனித்த எடப்பாடி பழனிச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் சாதாரண தொண்டர்களும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கிறார்கள் என பெருமிதம் கொண்டார்.