இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
"துண்டு சீட்டு இல்லாமல் பேசுவாரா ஸ்டாலின்.." முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி.!!
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து இருந்தார். இந்த விமர்சனத்திற்கு தற்போது இபிஎஸ் பதிலடி கொடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு 57,000 மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மேலும் இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார்.
புளுகு மூட்டை
இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை புளுகு மூட்டை என கடுமையாக விமர்சித்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பொதுமக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது மிகப்பெரிய பொய் என விமர்சித்தார். மேலும் முதல்வராக இருந்த தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றவர் கலைஞர். அதனால்தான் நலத்திட்ட உதவிகளுக்கு அவர் பெயரை சூட்டி இருக்கிறோம். பதவிக்காக தவழ்ந்து சென்ற உங்கள் பெயரை சூட்ட முடியாது எனவும் முதல்வர் விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: சீமானின் சமீபத்திய சர்ச்சை பேச்சு; டிடிவி தினகரன் விமர்சனம்.!
எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
இந்நிலையில் முதல்வரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி "முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது என பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய இபிஎஸ், அதிமுக ஆட்சி காலத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை என்னால் தற்போது கூற முடியும். ஆனால் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை துண்டு சீட்டு இல்லாமல் முதல்வரால் பேச முடியுமா.? எனகேள்வி எழுப்பினார். மேலும் கிளைச் செயலாளராக இருந்த நான் இன்று பொதுச்செயலாளராக இருப்பது எனது திறமை என குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, நான் தந்தையின் பெயரை வைத்து முதல்வரானவன் இல்லை எனவும் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தவெக மாநாடு; ட்ரெண்டிங்கில் மக்கள் தலைவர் அண்ணாமலை...!