சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
நான் அரசியலில் இணைகிறேனா! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அரசியலில் களமிறங்கப்போகிறார் என்ற செய்திகள் சில நாட்களாக பரவி வந்தது. இந்த செய்திகள் உண்மையா இல்லையா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் கம்பீர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். டெல்லியைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்காற்றினார்.
சமீபத்தில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின்பு இவர் அரசியலில் களமிறங்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கம்பீர் விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர், "நான் அரசியலில் இணையப்போகிறேன் என பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இவை அனைத்தும் பொய் என நிரூபிக்க எனக்கு சிறிது காலம் கொடுங்கள். ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் என்ற வகையில் இப்போது என்னுடைய எண்ணமெல்லாம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லுமா என்பதே" என்று பதிவிட்டுள்ளார்.
There have been speculative stories that I am joining politics. Please allow me to clarify that there’s no truth in this. At the moment, I am merely a retired cricketer who like all of you is waiting for India’s series win in Australia.
— Gautam Gambhir (@GautamGambhir) January 3, 2019