"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு... விடுதலை ஆவாரா அரவிந்த் கெஜ்ரிவால்.? சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு.!!
டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நாளை வெளியிட இருக்கிறது . இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமினில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நீரிழிவு நோயாளியான அவருக்கு சிறையில் உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி பலமுறை ஜாமீன் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இடைக்கால ஜாமின்
இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த மே மாத இறுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய கூட்டணி வேட்பாளர்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் தவெக மாநாடு தேதியில் மாற்றம்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!!
ஜாமீன் மனு மீதான தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் வழங்க கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இது தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான தீர்ப்பு சமகால இந்திய அரசியலில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விசிக மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக.?! அரசியலில் பரபரப்பை கிளப்பும் நிகழ்வு.!