குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நடிகர் விஜய்யின் தவெக மாநாடு தேதியில் மாற்றம்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டினார். சில வாரங்களுக்கு முன்பு இவரது கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியானது. மேலும் தவெக கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது. இந்நிலையில் அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தவெக
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது அரசியல் கட்சியை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்தார் விஜய். இதனைத் தொடர்ந்து இவரது கட்சிக்கான மாநில மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கட்சியின் கொடி மற்றும் கட்சியின் கொள்கை பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இவரது கட்சியில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் மாநில மாநாடு
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற இருப்பதாக முதலில் அறிவிப்பு வெளியானது. எனினும் இவர்களது கட்சி மாநாட்டிற்கு சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கியது. இதனால் மாநாட்டிற்கு குறுகிய காலமே கால அவகாசம் இருப்பதால் வேறு தேதியில் மாநாடு நடத்தப்படலாம் என்று செய்திகள் தெரிவித்தன. மேலும் மாநாடு பற்றிய அறிவிப்பை நடிகர் விஜய் இன்று வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: பரபரப்பாகும் பனையூர் வட்டாரம்.. நாளை காலை கட்சிக்கொடியை அறிமுகம் செய்யும் நடிகர் விஜய்.!
அக்டோபர் 15-ல் மாநாடு.?
செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் இம்மாத 23ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கியது. எனினும் மாநாடு நடத்துவதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தவெக கட்சியின் மாநாடு நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: கோட் பட தலைப்பில் சனாதனம்? அதிர்ச்சியை தந்த விசிக எம்.பி.. பரபரப்பு விளக்கம்.!