நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ; அதிரடி கைதால் பரபரப்பு..!!



nakeeran-gobal---arrest---mdmk-vaiko

கைது செய்யப்பட்ட பத்திரிகையாசிரியர் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளை பாலியல் முறைகேடுகளுக்கு உட்படுத்துவதற்கு அழைத்து கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான செய்தியில் ஆளுநரை தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் அவர்களை இன்று காலை சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.அதன் பிறகு சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

Tamil Spark

 தகவலறிந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நக்கீரன் கோபாலை சந்திக்க சென்றனர். ஆனால் காவல்துறையினர் சந்திக்கவிடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

அப்போது வைகோ நான் ஒரு வக்கீலாக வந்துள்ளேன்; எனவே என்னை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்கள் தொடர்ந்து மறுக்கவே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது உடனே காவல்துறையினர் வைகோவை கைது செய்து பிறகு விடுவித்தனர்.