கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#Breaking || அ.தி.மு.க அலுவலகத்தில் கொள்ளையடித்ததா ஓ.பி.எஸ் தரப்பு?!: பரபரப்பு புகார்..!
பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரும்பான்மையாக கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழந்ததாகவும் கூறப்பட்டது. அப்போது, ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் அ.தி.மு.க அலுவலகம் சூறையாடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் மேலும் கூறியுள்ளதாவது:-
கட்சி தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளார். கோவை, திருச்சி மற்றும்புதுவை அ.தி.மு.க அலுவலக இடங்களுக்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அ.தி.மு.க பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பி.எஸ் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்