இப்போ மட்டுமல்ல எப்பவுமே தமிழ்நாட்டை நீங்கள் ஆள முடியாது..! பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.!



rahul-gandhi-talk-about-bjp

மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தமிழக மக்களை பாஜக ஒருபோதும் ஆளமுடியாது எனக் கூறினார்.

இந்தியா ஒரே இந்தியாவாக இல்லை. இரண்டாக பிரிந்து உள்ளது. ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், மற்றொரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்கானதாகவும் உள்ளது. இந்தியாவில் மக்களாட்சி நடக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மன்னர் ஆட்சியை கொண்டு வருகிறார்கள்.

மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள். சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லையெனில் இனி மேட் இன் இந்தியா சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.  எனது கருத்துக்களை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல், அக்கறையுள்ள குடிமகனின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் அதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை. உங்களது வாழ்நாளில் ஒரு போதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என குறிப்பிட்டார். ராகுல் காந்தி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.