குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஒற்றை தலைமை விவகாரம்: எடப்பாடிக்கு போன் போட்ட ராகுல்..! விரைந்து சென்ற பாஜக.!
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி விட்டு ஒரே தலைமையாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தரப்பில் செய்து வருகின்றனர்.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு சட்டரீதியான நடவடிக்கைகளை அவர் கையாண்டு வருகிறார். இருப்பினும் அதனை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆயத்தமாகி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மோதல்கள் நடந்த உடன் ஓ பன்னீர்செல்வம் வெளியேறினார். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் இருந்து ராகுல் காந்தி தரப்பு போன் செய்ததாக தகவல் வெளியாகியது.
அதாவது எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலம் ராகுல்காந்தி பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்தவுடன் பாஜக தரப்பு உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று எதிர்க்கட்சி வேட்பளார்களுக்கு ஆதரவு தர வேண்டாம். பாஜகவை ஆதரியுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.