மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; விபரம் உள்ளே.!
தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி கடந்த 1996 - 2001 ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, சைதாபேட்டை பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான 3000 சதுர அடி நிலத்தை மாமியாரின் பெயரில் பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விஷயம் குறித்து நடந்து வந்த வழக்கில் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்ததது. ஆண்டுகள் கடந்ததும் 2017-ல் இலஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்திற்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காலை 10:30 மணியளவில் நீதிபதி தீர்ப்பு வாசித்த நிலையில், நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை நீதிபதி ஜெயவேல் வழங்கி இருக்கிறார்.
அமைச்சர் பொன்முடி மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் ஆகியோரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.