திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: விஜயின் அரசியல் அறிவிப்பு; முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?..!
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை அவர் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள், திமுக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் விஜயின் அரசியல் வருகை அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "மக்களுக்கு தொண்டாற்ற அரசியலுக்கு யார் வருகை தந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே" என தெரிவித்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் வாயிலாக 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான கட்சி பதிவு மற்றும் பிற பணிகளை அவர் தொடங்கி இருக்கிறார். மக்களுக்கான நலப்பணியில் ஈடுபட்டு வந்த தனது விஜய் மக்கள் இயக்கத்தினை அவர் தொடர்ந்து கட்சியாக பெயர் மாற்றத்துடன் பதிவு செய்திருக்கிறார்.