இனி நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் ஓ.பி.எஸ் அதிரடி பேட்டி..!



Wait and see what is going to happen next OPS action interview

எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் அ.தி.மு.கவில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்பு இவர் பா.ம.கவில் இணைந்தார். அதன் பின்னர் டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசியலில் இருந்து விலகினார். நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய போது அவருடன் இணைந்து பணியாற்றிய பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் ஜெயலலிதாவின் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.கவில் அதிகார போட்டி ஏற்பட்டது. இந்த் போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருந்தது. இதன் காரணமாக, சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இந்த இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை சந்தித்தோம்" என்று கூறினார்.

பின்னர் நீதிமன்ற தீர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், நாங்கள் நம்புவது அ.தி.மு.கவின் முழுமையான தொண்டர்களை மட்டுமே, தீர்ப்புகளை அல்ல. தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அந்த வழியில் தான் என்னுடைய அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.