96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அச்சச்சோ.. பெண்கள் மது அருந்தினால் உல்லாசத்தின் பிரச்சனை.. அந்தரங்க பகுதியில் வலி - ஆய்வில் உச்சகட்ட எச்சரிக்கை..!
மதுபானம் அருந்தும் பழக்கத்தை ஒவ்வொருவரும் ஏன் கைவிடவேண்டும் என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும், அவை தாம்பத்திய வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுகிறது. அப்படியொரு அதிர்ச்சி ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது தொடர்பான தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நாகரீகம் என்ற பெயரில் பழமைகளை மறந்து புதுமையை தேடினாலும், அது உடல் நலத்தை கேடாக்கும் வகையில் உள்ளதே எளிதில் கிடைக்கிறது. அந்த வகையில், இன்று இளம் தலைமுறை மேலை நாடுகளின் நாகரீகத்தை பார்த்து வியந்து பேசி வருகிறது. அவர்களை போல தாங்களும் செய்வோம் என சாதனைகள் புரியாமல் குடி, கஞ்சா, போதை பவுடர் போன்றவற்றை உபயோகம் செய்து வருகிறது. முந்தைய காலங்களில் ஊராருக்கு பயந்து 4 ஊர்கள் தள்ளிச்சென்று குடிகார கூட்டம் குடித்து வந்தால், இன்றுள்ள நிலையில் ஊருக்கு 4 டாஸ்மாக் திறக்கப்பட்டு ஆண்களும் - பெண்களும் மதுபோதைக்கு அடிமையாக தொடங்கிவிட்டனர்.
மது என்பது இருபாலருக்கும் உடலுக்கு பெரும் தீங்கினை ஏற்படுத்தும், எதிர்காலத்தை சீரழிக்கும். மதுவின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை கெத்துக்காக குடித்து வரும் கூட்டமும் இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மதுபானம் அருந்தினால் பெண்களின் அந்தரங்க வாழ்க்கையில், தாம்பத்திய உடலுறவின் போது பெண்ணுக்கு பிறப்புறுப்பில் வறட்சி காரணமாக அதிக வலி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட மெனோபாஸ், மன அழுத்தம், வரைமுறையில்லாத உடலை சீரழிக்கும் உணவுப்பழக்கம் போன்றவை காரணமாக அமைகின்றன. இன்றுள்ள பெண்களும் - ஆண்களும் மதுபோதைக்கு அடிமையாகி வரும் நிலையில், தம்பதிகள் தங்களின் தாம்பத்திய கூடலுக்கு முன்னர் மதுபானம் அருந்தி உடலுறவு மேற்கொண்டால் பெண்ணின் பிறப்புறுப்பு நாளடைவில் வறட்சியை சந்திக்கிறது.
அதாவது, மதுபானம் அருந்தும் ஆண்களின் உடலை விட பெண்களின் உடல் மதுவை வித்தியாசமான முறையில் உறிஞ்சுக்கொள்கிறது. மெட்டபாலிசத்தை தன்மை ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வேறுபடுகிறது. பெண்களின் இரத்தத்தில் ஆண்களை விட அதிகளவு ஆல்கஹால் சேருகிறது. இதனால் மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்ட பெண்கள், மதுபானம் அருந்தி உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை, உடற்பருமன், உறக்க பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, அதிக கோபம், இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் உயர் கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பொதுவாக பாலியல் ஆசைகளை மதுபானம் அதிகரிக்கும், அதை குடித்துவிட்டு உல்லாசமாக இருந்தால் நீண்ட நேரம் உற்சாகத்துடன் இருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் தவறான கூடவும். மதுவின் தன்மை இருபாலரையும் போதை நிலையில் வைப்பதால் இருவரும் அதிக நேரம் ஊடல்-கூடல் கொண்டது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. இருவரும் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி உல்லாசமாக இருப்பது பிற்காலத்தில் பாலியல் ஆர்வம், உல்லாசத்திற்கான தூண்டுதலில் குறைபாடு, உல்லாசத்தின்போது உச்சகட்டத்திற்கான குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
மதுபானம் அருந்துவதால் பெண்களின் பிறப்புறுப்பு வறட்சியை சந்திக்கிறது. ஆல்கஹால் பெண்ணுறுப்பில் உராய்வை குறைக்க சுரக்கும் திரவத்தின் சுரப்பை கட்டுப்படுத்தி பிறப்புறுப்பில் வறட்சியை ஏற்படுகிறது. இதனால் வலி ஏற்படும். மத்திய நரம்பு மண்டலத்தினை ஆல்கஹால் பலவீனப்படுத்தும் என்பதால், பிற்காலத்தில் பாலியல் ஆசை, தூண்டுதல் போன்ற செயல்களுக்கு அது சிரமப்படும். இறுதியாக உடலின் நீரிழப்புக்கு மதுபானம் பெரும் காரணியாக இருப்பதால், தாம்பத்தியத்தின்போது பெண்ணின் பிறப்புறுப்பில் திரவம் சுரக்காமல் அசௌரியமும் ஏற்படும்.
நமது உடல் வறட்சியால் பிறப்புறுப்புக்கு செல்லும் இரத்தம் & ஆக்சிஜனின் சுழற்சியும் குறைக்கப்பட்டு பாலியல் ஆசைகள் சுரப்பி எதிர்மறையாக பாதிக்கப்பட்டு தலைவலி, மயக்கம் போன்றவையும் ஏற்படும். மதுப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்தணு வெளியேற்றம் போன்றவற்றில் பிரச்சனை ஏற்படும் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம். அதேபோலத்தான் பெண்களுக்கும் அதுசார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆக, மதுபழக்கத்தை கைவிடாத பட்சத்தில் உங்களின் வாழ்க்கையில் சந்தோசம் கேள்விக்குறியாகலாம். இதனால் அதன்தொடர்ச்சியாக தாம்பத்திய திருப்தியின்மை, தாம்பத்திய வெறுப்பு, மற்றொருவரின் மீது ஆசை என பிற நிகழ்வுகளும் நடக்கலாம்.
மதுவை கைவிடுவோம்., ஆரோக்கியமான, வளமான வாழ்க்கையை அடைவோம்..!