ஷிகர் தவான் இல்லாததது இந்திய அணிக்கு இவ்வளவு பெரிய இழப்பா! இதப் படிங்க புரியும்



Affects of dawans ruled out

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவானின் இடது கட்டைவிரலில் அடிப்பட்டது. அன்றைய போட்டியில் அவர் பீல்டிங் செய்ய வரவேயில்லை. காயம் குணமாக சில நாட்கள் ஆகும் என்பதால் அடுத்த 3 வாரங்கள் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Shikar Dhawan

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே முதல் 3 பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் மற்றும் கோலி தான். அதிலும் தற்போதைய நிலைமைக்கு இந்திய அணியில் இருந்த ஒரே இடது கை பேட்ஸ்மேன் தவான் மட்டுமே. சமீபகாலமாக நடைபெற்ற ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவரும் அவரே.

இந்நிலையில் ஷிகர் தவானின் இந்த ஓய்வு இந்திய அணிக்கு மிக்ப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலைக்கு சிறந்த ஓப்பனர்களாக இருந்தவர்கள் தவான் மற்றும் ரோகித் மட்டுமே. வேறு எந்த அணியிலும் இப்படி ஒரு இணை இல்லை.

Shikar Dhawan

இதனால் இந்திய அணி தவான் மற்றும் ரோகித்தை மலை போல் நம்பியிருந்தது. ஆனால் இப்போது இந்திய அணியின் துவக்க பார்ட்னர்ஷிப் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். தற்போது அணியில் இருக்கும் வீரர்களில் துவக்க ஆட்டக்காரராக கேஎல் ராகுல் மட்டுமே ஆடுவார்.

அதே சமயம் அவருக்கு ஐபிஎல்லில் ஆடிய அனுபவம் மட்டுமே அதிகம் உள்ளது. அப்படியே அவரை இறக்கினாலும் நான்காவது இடத்தை யார் நிரப்புவார் என்ற பெரிய கேள்விக்குறி உருவாகும். இதற்கு ஒருவேளை ஸ்ரேயஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்டை தான் பெரும்பாலானோர் பரிந்துரைப்பர்.

ஒருவேளை நான்காவது இடத்தில் கேஎல் ராகுலையே இறக்க வேண்டும் என முடிவு செய்தால் இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பிரிதிவ் ஷா மட்டுமே. இளம் வீரரான இவர் அதிரடியாத ஆடினாலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடும் அளவிற்கு அவருக்கு அனுபவம் இல்லை. ஐபிஎல் தொடரிலே ஒரு சில ஆட்டங்களில் மட்டும் தான் அவர் சிறப்பாக ஆடினார்.

Shikar Dhawan

என்ன செய்தாலும், யாரை கொண்டுவந்தாலும் தற்போதைய நிலைமைக்கு ஷிகர் தவானை ஈடுகட்டுவது கடினமான விஷயம் தான். கோப்பையை கைப்பற்றும் கனவிலீ இருக்கும் கேப்டன் கோலி மற்றும் அணி நிர்வாகத்திற்கு இது மிகப்பெரிய தலைவலியாய் அமைநீதுவிட்டது. சரி என்ன தான் செய்கிறார்கள் என வியாழக்கிழமை இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.