குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
போட்டிக்கு நடுவே மைதானத்திற்குள் வாத்தி கம்மிங் நடனமாடிய அஸ்வின்.. வைரல் வீடியோ..
சேப்பாக்கம் மைதானத்தில் வாத்தி கம்மிங் ஸ்டெப் போட்ட அஸ்வினின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றநிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அனைத்து வீரர்களும் கடுமையாக போராடியநிலையில், ரோஹித் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். குறிப்பாக தமிழாக வீரர் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் அஸ்வின் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இதனால் ஆட்டநாயகன் விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் போட்டியின்போது மைதானத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த அஸ்வின், மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் வெளிப்படுத்திய நடன அசைவை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.