இந்திய இளம் செஸ் வீரர் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.! இந்தியன் ஆயில் நிறுவனம் கொடுத்த அதிரடி ஆஃபர்.!



Chess player Pragyananda gets a job in Indian Oil

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். இதில் கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தினார். அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. தொடர்ந்து டை பிரேக்கரில் தோல்வியடைந்ததால் 2வது இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா.

இந்த நிலையில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் தனது 18 வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.