96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
47 வருட சாதனையை முறியடித்த பட்லர் - க்ராலே ஜோடி.. வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நேற்று துவங்கியது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணியின் க்ராலே 171 மற்றும் பட்லர் 87 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்திலும் இருவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜோஸ் பட்லர் டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை விளாசினார். மேலும் 22 வயதேயான க்ராலே தனது முதல் இரட்டை சதத்தினை விளாசினார். குறைந்த வயதில் இரட்டை சதமடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் க்ராலே மூன்றாவது இடம்பிடித்துள்ளார.
மேலும் 5 ஆவது விக்கெட் ஜோடியாக இணைந்த க்ராலே மற்றும் பட்லர் இதுவரை 272 ரன்கள் எடுத்துள்ளனர். 5 ஆவது விக்கெட்டிற்கு இங்கிலாந்து அணியில் இதற்கு முன்னதாக ப்ளட்சர் மற்றும் க்ரேக் எடுத்த 254 ரன்களே முதலிடத்தில் இருந்தது. தற்போது இவர்களது சாதனையை 47 ஆண்டுகள் கழித்து க்ராலே மற்றும் பட்லர் இணை முறியிடித்துள்ளனர். இங்கிலாந்து அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்துள்ளது.