தோனிக்கு இப்படி ஒரு ரசிகையா! 75 வயது பாட்டி என்ன காரியம் செய்துள்ளார் பாருங்கள்



Dhoni fan 75 year old lady hair cut

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு 75 வயது பாட்டி தோனிக்காக என்ன செய்துள்ளார் பாருங்கள்.

சூர்யா காயத்ரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது 75 வயது பாட்டியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பாட்டியின் தலையில் 'DHONI' எனும் பெயர் தெரியும்படி முடியை வெட்டியுள்ளார் அந்த பாட்டி.

dhoni

பல இளைஞர்கள் இதுபோன்று செய்வது எதார்த்தமான ஒன்று தான். ஆனால் இந்த 75 வயது பாட்டியின் இந்த செயல் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் அந்த பாட்டியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ள அவரது பேத்தி பாட்டியின் ஆசையையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தோனியை சந்தித்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்பது பாட்டியின் ஆசையாம். இந்த ஆசையை நிறைவேற்ற உதவுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.