3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
நேற்றைய ஆட்டத்தில் தோனியின் கையில் இதை கவனித்தீர்களா!
நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனியின் கீப்பிங் க்ளவுஸை பலரும் கவனித்திருப்பார்கள். இதற்கு காரணம் முந்தைய ஆட்டத்தில் தோனி அணிந்திருந்த கீப்பிங் க்ளவுஸில் இருந்த ராணுவ முத்திரை தான்.
தோனி இந்த முத்திரையை கீப்பிங் க்ளவுஸில் வைத்திருந்ததற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த முத்திரையை நீக்கும்படி ஐசிசி பிசிசிஐக்கு கடிதம் எழுதியது.
தோனி அந்த முத்திரையை நீக்க விரும்பாததால் பிசிசிஜ ஐசிசியிடம் அனுமதி கோரியது. ஆனால் இந்த வேண்டுகோளினை ஐசிசி நிராகரித்தது. ஆனால் இந்திய ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக பேசி வந்தனர். அடுத்த ஆட்டத்தில் தோனி எப்படி களமிறங்குவார் என்பதனை காண பலரும் காத்திருந்ததனர்.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கீப்பிங் செய்த தோனி முத்திரை இல்லாத புதிய க்ளவுஸினை பயன்படுத்தினார். ஐசிசியின் வேண்டுகோளினை ஏற்று தோனி தனது விருப்பத்தை மாற்றிக்கொண்டார்.